News April 3, 2025

ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

image

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணிணி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும்.<> ஷேர் <<>>செய்யுங்கள்

Similar News

News November 24, 2025

திருவள்ளூர்: ரீல்ஸ் செய்த வாலிபர் கைது!

image

பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில், பட்டா கத்தியுடன் ‘ரீல்ஸ்’ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர் ராஜதுரை (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். பள்ளிப்பட்டு தாலுகா நொச்சி தலையாரி காலனியைச் சேர்ந்த இவர், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், விரைந்து வந்த பொதட்டூர் எஸ்.ஐ. தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

News November 24, 2025

திருவள்ளூர்: 13 வயது சிறுவன் துடிதுடித்து பலி!

image

ஆவடியில் ஹரிஹரன் (13) என்ற சிறுவனின் வீட்டுக்கு வந்திருந்த உறவினரின் குழந்தைக்காக தூளி கட்டப்பட்டுள்ள நிலையில், உறவினர் ஊருக்குச் சென்ற பிறகும், ஹரிஹரன் அந்தத் தூளியில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இதனால் பெற்றோரும் தூளியை அகற்றாமல் விட்டுள்ளனர். நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் வழக்கம்போல் ஹரிஹரன் தூளியில் சுற்றி விளையாடும்போது, கழுத்து இறுக்கி உயிரிழந்தார்.

News November 24, 2025

தேசிய வில்வித்தை போட்டி பொன்னேரி மாணவி சாதனை

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 7 ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வெனிசா ஸ்ரீ. கடந்த மூன்று நாட்களாக உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் 69ஆவது எஸ் ஜி எஃப் ஐ தேசிய பள்ளிகள் விளையாட்டு வில் வித்தை போட்டியில் காம்பவுண்ட் போ பிரிவில் 14 வயதுக்குட்பட்டவர்க்கான பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளார்.

error: Content is protected !!