News August 3, 2024

ரயில்வே மேம்பாலத்தில் எம்.பி. கோபிநாத் ஆய்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதன் கட்டுமான பணிகளை கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர். அவர்களிடம் பாலத்தின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

Similar News

News September 17, 2025

கிருஷ்ணகிரியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

கிருஷ்ணகிரியில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ஓசூர் மாநகராட்சி – ஆர்.வி.அரசு மேல்நிலை பள்ளி
✅ ஓசூர் மாநகராட்சி – ஆச்சுவாஸ் அகாடமி மெட்ரிகுலேஷன் பள்ளி, ரிங்க் ரோடு
✅ ஊத்தங்கரை – அரசு உயர்நிலை பள்ளி, நாய்க்கனுர்
✅ தளி – அரசு உயர்நிலைப் பள்ளி, தக்கட்டி
✅ காவேரிப்பட்டினம் – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நரிமேடு (SHARE IT)

News September 17, 2025

ஓசூரில் 2 இளைஞர்கள் விபத்தில் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அசோக்குமார் மகன் நவீன் (19) தர்மபுரி மாவட்டம், பாலாலஹள்ளியை சேர்ந்த சுதர்சன் (19) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதில் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 17, 2025

கிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரியில் (செ. 19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10-மணி முதல் 1-மணி வரை நடைபெற உள்ளது. ஆர்டிஓ அலுவலகம் எதிரில்- மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், நடைபெறும். 10,+2, ஐடிஐ டிப்ளமோ டிகிரி முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!