News May 16, 2024
ரயில்வே பயணிகளுக்கு புதிய செயலி.

திருச்சிராப்பள்ளியில் உள்ள ரயில் நிலையத்தில் யூ டி எஸ் மொபைல் ஆப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு அவர்களுக்கு உதவுவதற்கும் பிரத்யேக ஹெல்ப் டெஸ்க் இன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை நெறிப்படுத்துதல் சிரமமில்லாத டிக்கெட்டை கொடுப்பதற்கும் , பயணிகளின் பயணத்தின் மூலம் தடையின்றி செல்லவும் இந்த செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
திருச்சி: பால்காரர் கத்தியால் குத்தி கொலை

லால்குடி, நாகராஜ் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்காரர் ஆறுமுகம். இவரது இடத்தை அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பர் தனக்கு விற்க சொல்லி கேட்டு பிரச்னை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று பால் வியாபாரம் முடித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகத்தை கோவிந்தன் கத்தியால் குத்தியுள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News November 23, 2025
திருச்சி: சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் பாறைப்பட்டி குவாரிக்கு ஜல்லி ஏற்றச் சென்ற லாரி புத்தாநத்தம் அடுத்த மெய்யம்பட்டி பிரிவு ரோடு புதுக்குளம் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த ஓட்டுநர் செல்லப்பன்-ஐ மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 23, 2025
ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில், ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் இன்று (நவ.,22) தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை ஸ்ரீரெங்கநாச்சியார், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் பச்சைப்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை கண்டு, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.


