News April 26, 2025
ரயில்வே துறைக்கு தூத்துக்குடி எம்பி கோரிக்கை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் பகுதிக்கு சென்னையிலிருந்து சிதம்பரம் வழியாக ரயில் வருகிறது. எனவே இதனால் பக்தர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நேர்வழியில் புதிதாக ரயிலை இயக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 6, 2026
தூத்துக்குடி: சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு அலுவலக உலகத்திலுள்ள கிளை சிறையில் நேற்று (மார்ச்.05) பெண்ணை தாக்கிய வழக்கில் கைதான நிரஞ்சன் என்ற கைதி தப்பி ஓடி உள்ளார். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர். மேலும் சிறைத் துறை அதிகாரிகள் கிளை சிறையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
News March 6, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News March 5, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் தேதி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தலைவர் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 6 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர்ல் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தலா ஒரு அமர்வு உட்பட 15 அமர்வுகளில் நடைபெற உள்ளது.


