News April 26, 2025
ரயில்வே துறைக்கு தூத்துக்குடி எம்பி கோரிக்கை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் பகுதிக்கு சென்னையிலிருந்து சிதம்பரம் வழியாக ரயில் வருகிறது. எனவே இதனால் பக்தர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நேர்வழியில் புதிதாக ரயிலை இயக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 22, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(அக்.22) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காவல் நிலையங்களில் மனு அளிக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் மனுக்கள் மற்றும் பிற மனுக்களை அளிக்கலாம் என எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்
News October 21, 2025
கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவில் கந்த சஷ்டி திருவிழா

தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவிலில் நாளை (22) கந்த சஷ்டி திருவிழா துவங்க உள்ளது. இத்திருவிழா அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவில் அக்.26 அன்று முருகப் பெருமான் சூரனின் தம்பி தாரகா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், அக்.27 அன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.