News June 26, 2024
ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்த நாமக்கல் எம்.பி

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக மாதேஸ்வரன் பதவி ஏற்ற நிலையில், நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்நவ் சந்தித்து வாழ்த்து கூறியனார். அதோடு போடிநாயக்கனூரில் இருந்து சென்னை செல்லும் துரந்தோ ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல வேண்டுகோள் விடுத்தார். மேலும் கொல்லிமலை மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு 27 இடங்களில் செல்போன் டவர் அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி கூறினார்.
Similar News
News October 18, 2025
நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

நாமக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு விடுத்துள்ளார். தீபாவளி அதிரடி சலுகை தள்ளுபடி என்ற பெயரில் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகள், சமூக ஊடக செயலிகள் மூலம் வரும் கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அவ்வாறு ஏதேனும் குறுஞ்செய்தி அல்லது லிங்க் மூலம் உங்களை தொடர்பு கொண்டால் நீங்கள் உதவிக்கு அழைக்க வேண்டியவை 1930 என்ற என்னை அழைக்கவும்.
News October 17, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.17 நாமக்கல்-(தங்கராஜ் – 9498110895), வேலூர் – (சுகுமாரன் -8754002021), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (செல்வராசு -9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 17, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்டோபர்.17) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 18) முதல் முட்டையின் விலை ரூ.5.20 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.