News May 7, 2025
ரயில்வேயில் உடனடி வேலை வாய்ப்பு

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News November 22, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் மூலம் (நவம்பர் 22), 2025 அன்று பொதுமக்களுக்கு சைபர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் வங்கி கணக்கு விவரங்கள், OTP, கார்டு தகவல்களை தெரியாத நபர்களுடன் பகிர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. அவசர உதவிக்கு, சைபர் குற்ற எண் ‘1930’ அழைக்கலாம்.
News November 22, 2025
பழனி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கி உள்ளன. இந்நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், பழனி சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த முருகேஸ்வரி போட்டியிட உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
திண்டுக்கல்லில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு குடகனாறு பாலம் அருகே கம்பத்திலிருந்து பெங்களூருக்கு அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.


