News September 14, 2024
ரயில்கள் ரத்து: கூடுதலாக சிறப்பு பேருந்து இயக்க முடிவு

தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (செப்.15) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். நாளை அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 9, 2025
தேசிய பாதுகாப்பு படை அதிகாரியின் கார் எரிந்து நாசம்

தாம்பரம் அருகே நெடுங்குன்றத்தில், என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு குரூப் கமாண்டராக பணிபுரிந்து வருபவர், அங்குஷ் ஷர்மா. இவருக்கு சொந்தமான கார், இந்த மையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை, 3:30 மணிக்கு, இந்த கார் தீ பிடித்து எரிந்தது. பணியில் இருந்த ஊழியர்கள் தீ அணைத்தனர். இது குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 8, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவு பணி காவல் அலுவலர்களின் விவரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக இரவு பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது அவசரத் தேவை உள்ள நேரங்களில் மேற்கண்ட பட்டியலில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
செங்கல்பட்டு பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள்<


