News April 28, 2025
ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி

திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்
Similar News
News November 2, 2025
ராணிப்பேட்டை: இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

ராணிப்பேட்டை மாவட்ட போலீசார், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட இருவரை, இன்று (நவ.2) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் கோபி (25) மற்றும் நிவாஸ் (24) மீது மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
News November 2, 2025
ராணிப்பேட்டை: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News November 2, 2025
ராணிப்பேட்டை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

ராணிப்பேட்டை மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.


