News October 18, 2024

ரயில்களில் சோதனை – ரூ.48.61 லட்சம் அபராதம் வசூல்

image

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் வழியாக இயக்கப்பட்ட ரயில்களில் ரயில்வே துறை அதிகாரிகள் சார்பில் சோதனையிட்டு வருகின்றனர். அதன்படி அக்.1 முதல் 15 ஆம் தேதி வரை 15 நாள்களில் சேலம் ரயில்வே கோட்டத்தில் மொத்தம் ரூ.48,61,055 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2024

ஆசிரியர் கொலை: அரசை சாடிய வானதி சீனிவாசன் 

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட மாடல் அரசின் கீழ் தமிழகத்தின் பாதுகாப்பு நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அண்மையில் நடந்த ஆசிரியை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2024

கோவையில் 65 பேர் மீது குண்டர் சட்டம் 

image

கோவை எஸ்பி கார்த்திகேயன் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மாலை வெளியிட்ட செய்தி குறிப்பில் “பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும். இந்த ஆண்டில் இதுவரை 65 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 20, 2024

துக்க வீட்டில் தீ: பலி 3 ஆக உயர்வு

image

கோவை: கணபதி பகுதியில் துக்க வீட்டில் தீப்பிடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கோவையில் நவ.16ஆம் தேதி துக்க வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் ராமலட்சுமி, பானுமதி ஆகியோர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரன்(50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.