News March 28, 2025

ரயிலில் 26 கிலோ கஞ்சா பறிமுதல் 

image

டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த மூன்று பைகளை போலீசார் மீட்டு சோதனை நடத்தினர். இதில் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து  பறிமுதல் செய்த கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News December 23, 2025

ராணிப்பேட்டை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 23, 2025

ராணிப்பேட்டையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள அதிமுக மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில், ராணிப்பேட்டை நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (டிச.22) நடைபெற்றது. செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

News December 23, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு !

image

ராணிப்பேட்டை மக்களே! உங்கள் மாவட்டத்திற்கான எரிவாயு உருளை நுகர்வோர்கள், விநியோகிக்கும் முகவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் வரும் டிசம்பர் 30ம் தேதி, மாவட்ட ஆட்சியார் அலுவகத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் சேவை குறைபாடுகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!