News April 2, 2025

ரயிலில் 20 கிலோ கஞ்சாவுடன் இருவர் சிக்கினர்

image

சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் முன்பதிவில்லா பெட்டியில் திருச்சி-மண்டபம் வரை பயணித்த பயணிகளின் உடைமைகளை போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனை செய்தனர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதேஷ் மொகாந்தி 28, பிரியா பாரத் மொகாந்தி 40 ஆகியோரின் உடைமைகளை பரிசோதித்தனர். அப்பொழுது இருவரிடமும் 19.700 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இருவரையும் போதைப் பொருள் தடுப்பு போலீசில் ஒப்படைத்தனர்.

Similar News

News April 9, 2025

இராமநாதபுரத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்

image

▶️சித்திரை கார் என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். ராமநாதபுரம், திருப்புல்லாணியில் ஏக்கருக்கு சுமார் 1000கி வரையில் மகசூல் கொடுப்பதாக கருதப்படுகிறது.

▶️இராமநாதபுரம் குண்டு மிளகாய் என்பது இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்மையாக திருவாடானை, முதுகுளத்தூர், கடலாடி, இராஜசிங்கமங்கலம், கமுதி வட்டங்களில் விளைகிறது. *ஷேர் பண்ணுங்க

News April 9, 2025

மீனவர்களுக்கான இன்றைய(ஏப்.9) வானிலை அறிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (ஏப்.9) காற்றின் வேகம் 06 கிலோமீட்டர்/மணி முதல் 20 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2025

ராமநாதபுரத்தில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒர் பட்டபடிப்பு படித்த 20 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும்<>.இங்கு கிளிக்<<>> செய்து மே மாதம் 31-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!