News August 24, 2024
ரயிலில் வந்த நெல் மூட்டைகள்

ஈரோடு மாவட்ட பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு மாயவரத்தில் சாகுபடி செய்யப்பட்ட 2000 டன் நெல் மூட்டைகள் வந்தடைந்தன. அவற்றை ஈரோட்டில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு பாதுகாப்புடன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன அவற்றைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட உள்ளது.
Similar News
News September 18, 2025
ஈரோட்டில் அரசு பேருந்து ஓட்டுநரின் நேர்மை

சத்தியமங்கலத்தில் அரசு பேருந்தில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணத்துடன் இருந்த பையை தவற விட்ட மூதாட்டியிடம் பத்திரமாக எடுத்து ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன், நடத்துநர் மாதேஷ் ஆகியோருக்கு காவல்துறை பாராட்டு. மேலும் பணம் மற்றும் நகையை பாதுகாப்பாக எடுத்து ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
News September 18, 2025
ஈரோடு மக்களே முக்கிய அறிவிப்பு

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் 30- ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு தபால் அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இதில், அஞ்சல் துறை சேவைகள் பற்றி பொதுமக்களின் குறை மற்றும் கோரிக்கை மனுக்கள் தபால் மூலம் 24 தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா்
கி.கோபாலன் தெரிவித்தார்.
News September 18, 2025
ஈரோடு: போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு!

ஈரோடு: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் முன்பு போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் இன்றி இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது, காப்பீடு இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது, மது போதையில் வாகனங்களை ஓட்டக் கூடாது, 18 வயதுக்குட்பட்டவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.