News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News April 28, 2025

சமூக நலத்துறை வேலை வாய்ப்பு

image

இளைஞர் நீதிகுழுமத்திற்கு உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே 6ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பளம் ரூ.12,000 வழங்கப்படும். ஷேர் செய்யுங்கள்

News April 28, 2025

ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி

image

திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 28, 2025

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 28) வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அலெர்ட் கொடுத்துள்ளது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 -29 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். எனவே, பணிக்கு செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!