News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News April 28, 2025

ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி 

image

திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்

News April 28, 2025

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியை சேர்ந்த விவசாயி குப்பன் (45), இவரது உறவினர் மகன் கண்ணன் (13) என்பவரை வளர்த்து வந்தார். 7ஆம் வகுப்பு முடித்துள்ள சிறுவன் அமராபுரம் கிராமத்திற்கு பசுமாடுகளை மேய்க்க சென்றார். நீண்ட நேரம் கண்ணன் வீடு திரும்பாத நிலையில், அமராபுரம் கிராம குளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 27, 2025

இராணிப்பேட்டை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை (27.04.2025) இன்று இரவு பாதுகாப்பு பணிக்கான ரவுண்டு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களில் பொறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகும். அவசர தேவைக்காக இவை பயனுள்ளதாக இருக்கும்.

error: Content is protected !!