News April 27, 2025
ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News November 28, 2025
விழுப்புரத்தில் பருவ மழை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தொழிலாளர் நலத்துறை இயக்குநர் திரு.எஸ்.ஏ.இராமான், ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (நவ.28) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டார்.
News November 28, 2025
விழுப்புரம்: நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் நாளை ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!
News November 28, 2025
விழுப்புரம்:ஏரியில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் பழைய காலனியில் முதியவர் வீரமுத்து வாழ்ந்து வந்தார். இவர் நேற்று மாலை ஏரிப்பகுதியில் இயற்கை உபாதையை கழித்துவிட்டு ஏரி தண்ணீரில் கால் கழுவ சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


