News April 27, 2025
ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 அல்லது மகளிர் உதவி எண் 181 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News April 28, 2025
புதுச்சேரி: மின்தடை புகார்களுக்கான எண்

புதுச்சேரியில் ஏற்படும் மின்தடை புகார்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளது. அதன்படி, சூப்பரண்டிங்க் என்ஜினியர் மற்றும் துறைத் தலைவர் மின்னஞ்சல் முகவரி : se1ped.pon@nic.in மற்றும் தொலைப்பேசி எண்: 0413-2334277. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News April 28, 2025
புதுச்சேரி: பெயிண்டருக்கு கத்தி வெட்டு

உறுவையாறு பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் கிருஷ்ணகாந்த்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாலை உறுவையாறு ஏரிக்கரை பகுதியில் கிருஷ்ணகாந்த்தை சந்தோஷ், அவரது நண்பர் முருகன் ஆகியோர் கத்தியால் வெட்டிவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 27, 2025
புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுவையில் அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்துள்ளனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை ஏப்.28ஆம் தேதி முதல் வரும் ஜூன்.01ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.