News March 17, 2025

ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

image

சென்னை தாம்பரம் அருகே மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் விஸ்வா (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர், மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவரின் உடலைமீட்ட தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 18, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News March 18, 2025

விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 2025 மாதத்திற்கான, விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 21.03.2025 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள  விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News March 18, 2025

சாலை விபத்தில் அடகு கடை உரிமையாளர் மனைவி பலி

image

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம், ஓ.எம். மங்கலத்தைச் சேர்ந்தவர் கேசாராம், அடகு கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுந்தரி தேவி, இவர், நேற்று முன்தினம் மாலை, உறவினர் மகன் மனிஷ், என்பருடன் ஸ்கூட்டரில், வீட்டில் இருந்து அடகு கடைக்கு சென்றார். தக்கோலம் சாலையில் சென்ற போது, கார், ஸ்கூட்டரின் பின்னால் மோதியது. இதில் சுந்தரி தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனிஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!