News March 17, 2025
ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

சென்னை தாம்பரம் அருகே மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் விஸ்வா (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர், மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவரின் உடலைமீட்ட தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 18, 2025
மும்பை இந்தியன்ஸ் உடன் மோதல் தீவிர பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள்

சென்னை அணி தங்களுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் (மார்ச்17) மைதானத்தில் தீவிர பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
News March 18, 2025
சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடாது

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், விலைவாசி உயர்வுக்கேற்ப மீட்டர் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி ஆட்டோ சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் 1.5 கி.மீ.க்கு ரூ.50, அடுத்தடுத்த கி.மீ.க்கு ரூ.25 என நிர்ணயிக்க வலியுறுத்தி வரும் மார்ச் 19ஆம் தேதி தொழிற்சங்கம் போராட்டத்தை அறிவித்தது.
News March 18, 2025
சென்னையில் கார் வாங்குபவர்களின் கவனத்திற்கு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஜூன் மாதம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னையில் வாகன நிறுத்த தேவையை அறிந்து மேலாண்மை செய்யும் வகையில் வாகன நிறுத்தக் கொள்கை உருவாக்கப்பட உள்ளதாக அறிவித்தார். இதனால், பொதுமக்கள் கார்களை வாங்கும் போது வாகன நிறுத்தச் சான்று கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.