News March 24, 2025
ரம்ஜானுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி நம்பாதீங்க!

தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் விடுமுறையை வேலை நாளாக ஆட்சியர் அறிவித்ததாக வதந்தி பரவியது. அதாவது, மாசிமக விழாவுக்கு கடந்த 12ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 29ஆம் தேதி பணி நாளாக ஆட்சியர் அறிவித்தார். இந்நிலையில், மார்ச் 29ஆம் தேதி ரம்ஜான் கிடையாது 31ஆம் தேதி தான் ரம்ஜான் பண்டிகை என உண்மை சரிபார்பகம் உரிய விளக்கம் அளித்தது. இதை SHARE பண்ணுங்க
Similar News
News November 8, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (நவ.07) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
தெரு நாய் கடித்து 50 நாட்டுகோழிகள் உயிரிப்பு

கும்பகோணம் விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் இவரது வீட்டின் தோட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்த்த நிலையில், நேற்று இரவு இவரது வீட்டின் தோட்டத்திற்கு புகுந்த தெரு நாய்கள் அங்கிருந்த நாட்டுக் கோழிகளைக் கடித்து குதறின. இதில் 50க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் இறந்த கோழிகளை கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகர்களிடம் காண்பித்து வேதனை அடைந்தார்
News November 7, 2025
தஞ்சை: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கு முடங்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT


