News August 23, 2024

ரமணா படம் பாணியில் மருத்துவமனையில் மோசடி?

image

மதுரை அருகே கொந்தகையை சேர்ந்த இளமாறன் விபத்தில் பலத்த காயமடைந்து மதுரை குருவிக்காரன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 18ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக ரூ.4.50 லட்சம் பெற்ற மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமலும் இளைஞரை பார்க்க விடாமல் இருந்த நிலையில், இளைஞர் இன்று மூளைச்சாவடைந்ததாக தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News December 8, 2025

மதுரை: விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி பலி

image

மதுரை, பரவையைச் சேர்ந்த கார்த்திக்(36) மற்றும் அவரது மனைவி சங்கீதா(21) இருவரும் சேர்ந்து டூவீலரில் மேலூர் – அழகர்கோவில் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.
அ.வல்லாளப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் அமர்ந்து இருந்த சங்கீதா தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டது. மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 8, 2025

மதுரை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். e<>lectoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

News December 8, 2025

மதுரை: வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க.!

image

மதுரை மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!