News December 6, 2024

ரப்பர் உற்பத்தியில் இந்தியா 3வது இடம்: மாநாட்டில் தகவல்

image

இந்தியாவில் 6.40 லட்சம் டன் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கை ரப்பர் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்திலும், தாய்லாந்து 26 லட்சத்து 15 ஆயிரம் டன் உற்பத்தியுடன் முதலிடத்திலும், இந்தோனேசியா 2வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில், கேரள மாநிலத்தில் 85% ரப்பரும், தமிழ்நாட்டில் 4%  ரப்பரும் உற்பத்தி செய்யப்படுவதாக குலசேகரத்தில் நேற்று(டிச.,6) நடைபெற்ற ரப்பர் விவசாயிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Similar News

News December 3, 2025

மார்த்தாண்டம் சந்தையில் ஒருவர் சடலமாக மீட்பு

image

நல்லூர் பாறைவிளையைச் சேர்ந்த, திருமணம் ஆகாத காய்கறி வியாபாரி பீட்டர் (35), குடிபழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று டிச.2ம் தேதி இரவு மார்த்தாண்டம் காய்கறி சந்தையில் மரணமடைந்த நிலையில் கிடந்தார். தகவல் பெற்ற மார்த்தாண்டம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 3, 2025

நாகர்கோவிலில் இருந்து கோவாவிற்கு சிறப்பு ரயில்

image

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து கோவா மாநிலம் மடகானுக்கு 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதை போன்று மடகாணியில் இருந்து 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை புதன்கிழமை நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இதற்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.

News December 3, 2025

குமரி: SBI வேலை.. தேர்வு இல்லை – APPLY!

image

குமரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!