News March 20, 2025
ரசாயன ஊசி செலுத்தப்பட்ட 6 டன் தர்பூசணி பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ரசாயன ஊசி செலுத்தப்பட்ட தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 9 இடங்களில் சோதனை மேற்கொண்ட உணவுத்துறை அதிகாரிகள் 6 இடங்களில் சுமார் 6 டன் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், உள்புறம் சிவப்பாக இருப்பதற்காக ஊசி செலுத்தப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News March 23, 2025
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஓட்டுநர் கைது

ஓசூர் என் பி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் யோகேஷை (43). தனது வீட்டிற்கு விளையாட வந்த மூன்று வயது பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஓட்டுநர் யோகேஷை கைது செய்தனர்.
News March 23, 2025
தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க.
News March 23, 2025
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை

ஒசூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழக்கடைகளில், ஒசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தியதில், பெரும்பாலான பழக்கடைகளில் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் தெரிய வந்துள்ளது.ஓசூர் பகுதியில் மெழுகு பூசிய ஆப்பிள்களை ஆய்வு செய்த அதிகாரிகள்,வியாபாரிகளை கண்டித்தனர்.கடைகள் சீல் வைக்கப்படும் என உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.