News April 1, 2025

ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

image

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.

Similar News

News April 15, 2025

வேலூரில் இலங்கை மன்னனுக்கு நினைவிடம்

image

இந்திய சுதந்திர போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய வேலூர் இலங்கையோடும் தொடர்பு கொண்டுள்ளது. இலங்கையின் கண்டி பகுதியை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்ரமராச சிங்கன் வேலூர் கோட்டையில் பிரிட்டிஷால் சிறை வைக்கப்பட்டு உயிரிழந்தார். மன்னர் விக்ரமராச சிங்கன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இங்கு நினைவிடம் உள்ளது. இலங்கை சுதந்திர போரிலும் தொடர்பு கொண்ட வேலூர் பற்றிய தங்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியரின் இன்றைய அறிவிப்பு

image

மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஸ்டார் அகாடமி மூலம் 12 முதல் 21 வயதிற்குப்பட்டோருக்கு  இறகுப்பந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பயிற்றுநர் பதவி நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பத்தை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்று ஏப்ரல் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் நேரிலோ அல்லது 7401703483 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News April 15, 2025

மெட்ராஸ் ஐகோர்ட்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்!

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 – ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!