News March 20, 2024
‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.
Similar News
News December 1, 2025
பெரம்பலூரில் உள்ள புனித குளம் பற்றி தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் மகாமகக் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் மகாமகம் தினத்தன்று ஒருமுறை இறங்கி வழிபட்டால், முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். மேலும், ஒருமுறை குளத்தை வலம் வந்தால் 101 முறை அங்கபிரதட்சணம் செய்த புண்ணிய பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. நீங்கள் இந்த குளத்திற்கு சென்று வழிபட்டது உண்டா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE
News December 1, 2025
பெரம்பலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
பெரம்பலூர்: வசமாக சிக்கிய தப்பி ஓடிய போக்சோ கைதி!

பெரம்பலூர் மாவட்டம் ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர், போக்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்ற பொழுது தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து வாஞ்சிநாதன், கேரள மாநிலம் சபரிமலையில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் பெரம்பலூர் காவல் துறையினர் வாஞ்சிநாதனை சபரிமலையில் கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்தனர்.


