News April 7, 2025
யாரும் அறியாத கிருஷ்ணகிரி கல்திட்டைகள்

முதுமக்கள் தாழி பற்றி தெரிந்தவர்கள் டால்மென் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.கிருஷ்ணகிரியில் மல்லச்சத்திரம் பகுயில் முதுமக்களை அடக்கம் செய்த டால்மென்ஸ் எனப்படும் கற்திட்டைகள் காணப்படுகின்றன.சுற்றிலும் பாறைகளை கொண்டு சிறிய அறை போல் அமைத்து அதில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் வழக்கம் இருந்துள்ளது. இது போன்று இப்பகுதியில் நிறைய கல் திட்டைகள் உள்ளது. இதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
Similar News
News December 1, 2025
கிருஷ்ணகிரி: கல்குவாரியில் கஞ்சா செடி – போலீஸ் விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கலர்பதி என்ற கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு கல் குவாரியில் சுமார் 10 அடி உயரம் கஞ்சா செடியை அடையாளம் தெரியாத நபர்கள் வளர்த்துள்ளனர். இதனை அறிந்த மத்தூர் காவல் ஆய்வாளர் பத்மா, இன்று (டிச.01) மதியம், கல் குவாரியை சோதனை செய்தபோது கஞ்சா செடி இருந்தது, அறிந்து அதனை பிடுங்கி காவல் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர். பின் குவாரி உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.
News December 1, 2025
கிருஷ்ணகிரியில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக, இன்று (டிச.01) உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் & பொதுமக்கள் முன்னிலையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் எச்ஐவி /எய்ட்ஸ் விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
News December 1, 2025
கிருஷ்ணகிரி: ரூ.7.38 லட்சம் குட்கா கடத்தல் 3 பேர் கைது!

ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் போலீசார்,ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நேற்று (நவ.30) சோதனை செய்தனர். பின், அவ்வழியாக வந்த ஈகோ காரை நிறுத்தி சோதனை செய்தபோது, ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள, 125 கிலோ புகையிலை பொருட்கள் & ரூ.1,650 மதிப்புள்ள கர்நாடகா மதுபானங்களை, காஞ்சிபுரத்திற்கு கடத்தியது தெரிந்தது. காரை ஓட்டிச்சென்ற, ஜெயபிரசாந்த் (32) என்பவரை போலீசார் கைது செய்து. காருடன் மது,புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


