News August 10, 2024
யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம்: கூல் சுரேஷ்

தோழர் சேகுவார் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ் பேசிய போது, “இது ஒரு சகாப்தம் படைக்க சனாதனத்தை எதிர்க்கும் மேடை என்றும், வரும் 2026-யில் கூல் சுரேஷ் கட்சி திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் ஐயா யாருடனும் கூட்டணி வைக்கலாம் எனவும், விஜய் டிவி Bigg Boss நிகழ்ச்சியை திருமாவளவன் ஐயா தொகுத்து வழங்க வேண்டும்” என்றும் கூறினார்.
Similar News
News November 24, 2025
சென்னையில் தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் திரூஸ்(16). பிளஸ் 1 படித்து வந்தார். இவரது தாய் நிஷாந்தினி, கடந்த 2024 நவ., 24ம் தேதி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தந்தையிடம், ‘நான் அம்மாவை பார்க்க வேண்டும்; கூட்டி வாருங்கள்’ என, தொடர்ந்து கூறிவந்துள்ளார். ஒருகட்டத்தில் துக்கம் தாளாமல் திரூஸ் அம்மாவிடம் செல்கிறேன் என துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News November 24, 2025
சென்னை: பட்டப்பகலில் சங்கிலி பறிப்பு!

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மாணவர் ரிஷிகார்த்திக் கடந்த நவ.17அன்று தி.நகர் பாகிரதி அம்பாள் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூவர் தகாத வார்த்தைகள் பேசி தாக்கி, அவர் அணிந்திருந்த 1½ சவரன் தங்கச்சங்கிலியை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பினர். புகாரின் பேரில் R-4 காவல் நிலையம் விசாரணை செய்து, தனுஷ் (23), ஷாம் (21), ஜோசப் (19) ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.
News November 24, 2025
’சினிமாவில் நஷ்டம் ஏற்பட்டதால் போதை பொருள் விற்றேன்’

சினிமாவில் நஷ்டம் ஏற்பட்டதால் போதை பொருள் விற்பனை செய்ததாக கைதான சர்பூதின் தெரிவித்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில், நான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சிம்புவிடம் மேனேஜராக பணியாற்றினேன். சினிமாவில் சாதிக்க நினைத்து, சொந்த பணத்தை முதலீடு செய்து திரைப்படம் தயாரித்தேன். இதில், பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கடனை சமாளிக்க வழி தெரியாததால், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டேன் என்றார்.


