News August 18, 2024
யானை உயிரிழப்பில் தோட்ட காவலாளி கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் விரியன் கோயில் பீட்டிற்குட்பட்ட மகேஸ்வரிக்கு சொந்தமான தென்னந்தோப்பில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் அளித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது அதில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 20 வயது ஆண் யானை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக தோட்ட காவலாளி துரைப்பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 15, 2025
விருதுநகரில் ஆறு ஆண்டுகளாக அவலம்

விருதுநகர் கருமாதி மடம் எம்.ஜி.ஆர்.,சிலை அமைந்துள்ள பகுதியில் நான்கு புறங்களில் இருந்து ரோடுகள் சந்திக்கின்றன. விருதுநகரில் இருந்து கலெக்டர் அலுவலகம், சிவகாசி ரோட்டில் இருந்து அருப்புக்கோட்டை பாலம் ஆகிய ரோடுகளில் தினசரி ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர்.ஆனால் இந்த சிக்னல் 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் செயல்பாட்டிற்கு கொண்டு வராததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
News September 15, 2025
சிவகாசி அருகே சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

சிவகாசியில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் விளாம்பட்டி, மாரனேரி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் குறுகலான நிலையில் சாலை உள்ளதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 14, 2025
விருதுநகரில் புகார் அளிக்க எண் வெளியீடு

விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக குறைதீர்ப்பு அலுவலராக ஜெயபிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று, பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் 8925811346 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.