News August 25, 2024
மோடி 3.0 அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்

மத்திய அரசுக்கு எதிராக நவ. 26ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களின் MSP உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பட்ஜெட்டில் விவசாயிகளை மோடி அரசு புறக்கணித்துள்ளதாக விவசாய சங்கங்கள் விமர்சித்துள்ளன. அத்துடன், விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள 4 மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக களம் காணவுள்ளதாகவும் அவை அறிவித்துள்ளன.
Similar News
News October 14, 2025
சமூக பொறுப்பில் தமிழ்நாடு தான் முதலிடம்.. அதிரடி சர்வே!

பாலின சமத்துவம், பொது பாதுகாப்பு, பன்முகத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய Civic Sense-ல் எந்த மாநிலம் சிறந்து விளங்குகிறது என்ற ஆய்வை இந்தியா டுடே நடத்தியது. இதில், சமூக நடத்தையில் முதல் இடமும், பன்முகத்தன்மையில் 2-வது இடமும், பாலின சமத்துவத்தில் 3-வது இடத்தையும் தமிழ்நாடு பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, Civic sense தரவரிசையில் முதல் இடத்தில் கேரளாவும், 2-வது இடத்தில் தமிழ்நாடும் உள்ளது.
News October 14, 2025
FLASH: மீளாத இந்தியப் பங்குச்சந்தைகள்!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 162 புள்ளிகள் வீழ்ந்து 82,164 புள்ளிகளிலும், நிஃப்டி 25 புள்ளிகள் வீழ்ந்து 25,201 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. TCS, Tata Motors, Axis Bank, Bajaj Finance, Cipla உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் இன்று சரிவைக் கண்டுள்ளன. நீங்கள் வாங்கிய SHARE, உங்களுக்கு லாபம் தந்ததா?
News October 14, 2025
BREAKING: சீமான் வீட்டில் பரபரப்பு

சென்னை, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. DGP அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் வந்ததை அடுத்து, சீமான் வீட்டில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அண்மையில், CM ஸ்டாலின், EPS, விஜய் உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.