News August 9, 2024
மோசடி நபர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் கோவை புதூர் பகுதியில் டேட்டா என்ட்ரி நிறுவனம் துவங்கி பல கோடி மோசடி செய்ததாக பேரூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் புகாரளிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ளார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம் வரும் ஆக.12க்குள் ஆஜராக உத்தரவிட்டது.
Similar News
News August 8, 2025
கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோயமுத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (09.08.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம், கோவை வடக்கு மண்டலம் (வார்டு எண் -3) மடாலயம், சின்னவேடம்பட்டி ஆகிய பகுதியில் நடைபெற உள்ளது என கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இன்று தெரிவித்துள்ளார். மேலும் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 8, 2025
கோவை: பணம், தங்கத்துடன் இலவச திருமணம்!

கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் ) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்கள் அருகே உள்ள அரசு நிர்வாக கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT
News August 8, 2025
கோவை: உள்ளூரில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

கோவையில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Bussiness Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் <