News April 13, 2025

மொபெட் மீது டிராக்டர் மோதி ஒருவர் பலி

image

வந்தவாசியை அடுத்த நூத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (46). இவரது மனைவி அஞ்சலை (39), இவர்கள் வீரம்பாக்கம் – தென்இலுப்பை சாலையில், வீரம்பாக்கம் ஏரிக்கரை அருகே மொபட்டில் சென்றனர். அப்போது, எதிரே வந்த டிராக்டர் மொபட்டி மீது மோதியது. இந்த விபத்தில் ராமஜெயம் அதே இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அஞ்சலை படுகாயம் அடைந்தார். இதுகுறித்து, வந்தவாசி வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 2, 2025

தி.மலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

திருவண்ணாமலையில் நாளை( டிசம்பர் 3) கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தி.மலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுகட்ட டிசம்பர் 13 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News December 2, 2025

தி.மலையில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

image

சேத்துப்பட்டு மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், சேத்துப்பட்டு, நெடுங்குணம், வேப்பம்பட்டு, கோனமங்கலம், வெளக்கம்பட்டு, மருத்துவம்பாடி, இடையங்குளத்தூர், கரிப்பூர், நம்பேடு, உலகம்பட்டு, கங்கைசூடாமணி, முடையூர், ஆத்துரை, தேவிகாபுரம், ஓதலவாடி, தேவிமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க

News December 2, 2025

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (டிச.1) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!