News January 2, 2025
‘மொந்தன்’ வாழை பழத்திற்கு புவிசார் குறியீடு – மனு

தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான அம்மன்புரம் பகுதியில் ‘மொந்தன்’ என அழைக்கப்படும் வாழைப்பழம் மிகவும் பிரசித்தி பெற்று, அப்பகுதியில் மட்டும் வளரக்கூடிய ஒரு வாழை இனமாக உள்ளது. இந்த நிலையில் இந்த பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அம்மன்புரம் “மொந்தன் வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் புவிசார் குறியீடு வழங்க வேண்டி மனு தாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News November 9, 2025
தூத்துக்குடி: அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து உவரி செல்லும் 143 சி அரசு பேருந்து சென்றது. இப்பேருந்து காயல்பட்டினம் ஐசிஐசிஐ வங்கி அருகில் வந்த போது, மர்ம நபர்கள் பின்புறம் கல் எரிந்து கண்ணாடியை உடைத்துள்ளனர். இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 9, 2025
தூத்துக்குடி மாநகராட்சி கடும் எச்சரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் நாள்தோறும் 180 டன் குப்பைகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு கையாளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பை கொட்டப்படுகிறது. எனவே இவ்வாறு மழைநீர் வடிகாலிகளில் குப்பை கொட்டும் பொது மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.