News August 11, 2024
மைசூர் – காரைக்குடி சிறப்பு ரயில்

பயணிகளின் வசதிக்காக மைசூர்-காரைக்குடி சிறப்பு ரயில்(06295) மைசூரிலிருந்து ஆக. 14 மற்றும் 17 ஆகிய நாட்களில் இரவு 9.30 மணிக்கும், மறு மார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து – மைசூர் சிறப்பு ரயில்(06296) காரைக்கு ஆக. 15 மற்றும் 17 ஆகிய நாட்களில் மாலை 7 மணிக்கு இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று(ஆக. 11) தொடங்குகிறது.
Similar News
News July 8, 2025
உள்ளூர் வங்கியில் வேலை! ரூ.85,000 வரை சம்பளம்

சிவகங்கை மக்களே பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். <
News July 8, 2025
இளையான்குடி அருகே கார் விபத்தில் மனைவி, மகள் பலி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தை சேர்ந்த முருகன் விஏஓ முருகன் நேற்று (ஜூலை07) அதிகாலை தனது மனைவி, 2 மகள்களுடன் இளையான்குடி அருகே கோட்டையூர் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியது. இதில் மனைவி, மகள் பலியானர். முருகன் மற்றொரு மகளுக்கு சிறிய காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News July 7, 2025
அஜித் சிபிஐ வழக்கு – அரசிதழில் வெளியீடு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், அந்த சிபிஐ வழக்கை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளது.