News August 11, 2024
மைசூர் – காரைக்குடி சிறப்பு ரயில்

பயணிகளின் வசதிக்காக மைசூர்-காரைக்குடி சிறப்பு ரயில்(06295) மைசூரிலிருந்து ஆக. 14 மற்றும் 17 ஆகிய நாட்களில் இரவு 9.30 மணிக்கும், மறு மார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து – மைசூர் சிறப்பு ரயில்(06296) காரைக்கு ஆக. 15 மற்றும் 17 ஆகிய நாட்களில் மாலை 7 மணிக்கு இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று(ஆக. 11) தொடங்குகிறது.
Similar News
News November 25, 2025
சிவகங்கை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News November 25, 2025
சிவகங்கை: மின் கசிவு ஏற்பட்டு முதியவர் பரிதாப பலி

மதுரை தல்லாகுளம் மீனாம்பாள் நகரை சேர்ந்தவர் தாகீர்முகமது 60. இவர் தேவகோட்டை அருணகிரி பட்டினத்தில் உள்ள சகோதரி சவுரா பீவி வீட்டிற்கு வந்து இருந்தார்.நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மோட்டாரை இயக்கியுள்ளார். மின் கசிவு ஏற்பட்டு தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளதை கவனிக்காமல் தண்ணீரை எடுத்ததால் தாகீர் மீது மின்சாரம் பாய்ந்து பலி யானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 25, 2025
சிவகங்கை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


