News March 28, 2024
மைசூர்-கடலூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில்

மைசூா் – சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் ரயில்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்களும் எந்த சிரமமும் இன்றி கோடையை கழிப்பர் , ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 7, 2025
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 7) காலை 8:30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 4 மில்லி மீட்டர், சிதம்பரம் 1.1 மில்லி மீட்டர், கீழ்செருவாய் 1 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.5 மில்லி மீட்டர், கடலூர் 0.1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 6.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News December 7, 2025
கடலூர்: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 11.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 7, 2025
கடலூர்: மழை நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி மருங்கூர் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக டிட்வா புயலின் எதிரொலியால் பெய்து வந்த தொடர் மழையால், மழை நீர் வெளியேற வழி இன்றி வயலில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


