News April 27, 2025
மே தினத்தையொட்டி மதுபான கடைகள் திறக்க தடை

மே 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL2, FL3, FL3A, FL4A உரிமக் கடைகளில் மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை மற்றும் எடுத்துச் செல்லுதல் தடை செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
கிருஷ்ணகிரி: எச்.ஐ.வி., விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், எச்.ஐ.வி., எய்ட்ஸ், பால்வினை நோய்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் ஒழிப்பு குறித்த தீவிர விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்ச்சி, இன்று (செப்.17) ஆட்சியர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார். ஆட்டோக்களில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
News September 17, 2025
கிருஷ்ணகிரி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <
News September 17, 2025
கிருஷ்ணகிரி: தெரு நாயால் பறிபோன உயிர்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே நாற்றம்பாளையத்தைச் சேர்ந்த மல்லப்பா கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி தெரு நாய் கடித்ததில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, இன்று (செப்டம்பர் 17) பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.