News April 26, 2025
மேல்மலையனூருக்கு 65 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் சேவை நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 35 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 15 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 15 பஸ்கள் என மொத்தம் 65 பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Similar News
News November 20, 2025
விவசாயிகள், இளைஞர்களுக்கு உதவி: வேலூர் கலெக்டர் அறிவிப்பு!

வேலூர், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு உதவி டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு பின் டிராக்டர் ஓட்டுநர் உரிமம் தரப்படும். இதன் கூடுதல் விவரங்களுக்கு 8012242236, 9444955629 மற்றும் 9444251153 என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
SIR குறித்து ஆலோசனை கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு!

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் SIR குறித்து ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் இன்று (நவ.20) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு SIR பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாநகர செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News November 20, 2025
வேலூர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

வேலூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) இங்கு <


