News April 16, 2025

மேல்மலையனுார் கோயிலில் காணிக்கை வசூல்

image

மேல்மலையனுார் அங்காளம்மன் கோயில்  உண்டியல் எண்ணும் பணி நேற்று ஏப்.15 காலை துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், துணை ஆணையர் சிவலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.73 லட்சத்து 61 ஆயிரத்து 483 ரொக்கம் ,190 கிராம் தங்கம், 902 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Similar News

News November 25, 2025

விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த மாதம் 28ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் காலை 11 மணிக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் விவசாயிகள் தங்கள் குறைகளை நேரடியாக சொல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கூட்டத்தில் விவசாயிகளை நேரில் சந்திக்கிறார்.

News November 25, 2025

விழுப்புரம்: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

News November 25, 2025

விழுப்புரத்தில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

image

விழுப்புரத்தில் இன்று (நவ.25) காலை 9 மணி – மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாயனூா், மேல்மலையனூா், தேவனூா், மானந்தல், வடபாலை, ஈயகுணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலாம்பாடி, நாரணமங்கலம், மேல்வைலாமூா், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளைபெற்றாள், எய்யில், உண்ணாமந்தல், எதப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

error: Content is protected !!