News January 2, 2025
மேலூரில் ஜன.10ல் விசிக ஆர்ப்பாட்டம்

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் மற்றும் அரிட்டாபட்டி பகுதியில் பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜன.10ஆம் தேதி மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி மேடை அமையும் இடத்தை மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்றிரவு ஆய்வு செய்தனர்.
Similar News
News December 17, 2025
மதுரையில் தொழில் நஷ்டத்தால் தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் சமீர் மால் (46) என்பவர் 7 ஆண்டுகளாக எலக்ட்ரிக் பொருட்கள் விற்கும் தொழில் செய்து வந்தார். அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, மதுரை G.H-க்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News December 17, 2025
மதுரை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க
News December 17, 2025
மதுரை: மதுவால் இளைஞர் தற்கொலை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊமெச்சிக்குளம் காந்தி கிரவுண்ட் தெருவில் வசித்து வந்தவர் அருண்பாண்டி (25). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த அருண்பாண்டி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


