News August 27, 2024

மேம்பாலம் கட்டும் பணிகள்: கலெக்டர் ஆய்வு

image

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா மேம்பாலம் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் நேற்று (ஆக.26) மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் கடலூர் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.அனு மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News July 5, 2025

கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூலை 4 ) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

கடலூரில் முன்னாள் படைவீரர்களுக்கான முகாம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (10.7.2025) அன்று முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான ஓய்வூதிய குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் ஓய்வூதிய ஆவணங்களில் பெயர் மற்றும் இதர தகவல்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், ஆதார் புதுப்பித்தல் போன்றவைகளுக்கு உடனே தீர்வு காணப்படவுள்ளது. எனவே முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News July 4, 2025

கடலூரில் 2000 ஆண்டு பழமையான கோயில்

image

கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணத்திலுள்ள பூவராக சுவாமி கோயில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இங்குள்ள மூலவர் பூவராகவ சுவாமி முகம் பன்றி உருவிலும், மேனி மனித உடலுமாக காட்சி அளிக்கிறார். ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது சுயம்பு தலமாக இத்தலம் விளங்கி வருகின்றது. இங்குள்ள புஷ்கரணியில் நீராடி அரசமரத்தை சுற்றி வந்து பூவராகரை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. SHARE செய்யவும்!

error: Content is protected !!