News August 3, 2024

மேட்டூர் அணையில் அமைச்சர் ஆய்வு

image

சேலம், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணையின் வலது, இடது கரை மற்றும் 16 கண் மதகு பாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அணைக்கான நீர்வரத்து, அணையின் பாதுகாப்பு குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 17, 2025

சேலம்: சிறப்பு பேருந்துகள் 13 பேருந்து கூடுதலாக அறிவிப்பு!

image

திருமலை திருப்பதி தேவஸ்தான பிரமோற்சவ விழா வரும் 24ம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக சேலம் போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் 24ம் தேதி முதல் 2ஆம் தேதி வரை 13 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு 9 மணி 9:30 மணி 10:30 மணி என பேருந்துகள் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் அறிவிப்பு.

News September 17, 2025

சேலம்: மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதியும் உள்ளதா?

image

அஸ்தம்பட்டி, பேளூர், கே.ஆர்.தோப்பூர், சங்ககிரி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அஸ்தம்பட்டி, வின்சென்ட், மறவனேரி, ஏற்காடு, 4 ரோடு, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்கொட்டை,கே.ஆர்.தோப்பூர், முத்துநாயக்கன்பட்டி, இரும்பாலை, படைவீடு, சங்ககிரி மேற்கு, சங்ககிரி ரெயில் நிலையம், ஆகிய பகுதிகளில் இருக்காது.

News September 17, 2025

சேலம்: செப்.18 நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் செப்.18 நாளை முகாம் நடைபெறும் இடங்கள்;
▶️அம்மாபேட்டை செங்குந்தர் திருமண மண்டபம் திருவிக ரோடு.
▶️தளவாய்பட்டி சமுதாயக்கூடம் தளவாய்பட்டி.
▶️நரசிங்கபுரம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விநாயகபுரம். ▶️கொங்கணாபுரம் ஆனந்த மஹால் ரங்கம் பாளையம்.
▶️பனமரத்துப்பட்டி கிராம ஊராட்சி அலுவலகம் தும்மல் பட்டி.
▶️தலைவாசல் அம்மன் திருமண மண்டபம் நாவகுறிச்சி.

error: Content is protected !!