News October 17, 2025
மேட்டூரில் பெயிண்டர் கொலை: ஒருவர் சிக்கினார்!

சேலம்: மேட்டூர் கேம்ப் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் மணிகண்டன் ( 27) என்பவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து நடத்திய தீவிர விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் சிக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
வாழப்பாடியில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!

சந்திரபிள்ளைவலசு பகுதியைச் சேர்ந்த போர்வெல் ஆப்பரேட்டர் கார்த்திக் (26) ரங்கனூர் பகுதியைச் சேர்ந்த பி.எஸ்.சி.,பட்டதாரியான கிருத்திகா (20 என்பவரை கடந்த கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் இவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியறி திருமணம் செய்து கொண்டு நேற்று வாழப்பாடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.
News December 8, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (டிச. 07) இரவு முதல் இன்று காலை (டிச.8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.