News March 5, 2025
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில்

தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் இன்று விடுத்த செய்திக்குறிப்பில், வரும் மார்.28 முதல் ஜூலை.6 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், மார்.29 முதல் ஜூலை.7 வரை ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் சனி, திங்கட்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News December 12, 2025
கோவை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 19-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான பிரச்னைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம். இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
கோவை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News December 12, 2025
கோவை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<


