News August 14, 2024
மேடவாக்கத்தில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு

அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (27), பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ஆகும். இவர், நேற்றிரவு 11 மணி அளவில் மேடவாக்கம் கூட்ரோடு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 4 பேர் அவரை வழிமறித்து ராஜசேகரை சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். தகவல் அறிந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜசேகரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
Similar News
News November 4, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று (நவம்பர்-03) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
நாளை பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத வேதகிரிஸ்வரர் கோவிலில் நாளை பௌர்ணமியை முன்னிட்டு நாளை (நவ.04) இரவு 9:45 மணி முதல் புதன்கிழமை (நவ.05) இரவு 7:30 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கருதப்படுகிறது. பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வந்து இறைவன் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News November 3, 2025
செங்கல்பட்டு இளைஞர்களே செம வாய்ப்பு….

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <


