News April 9, 2025

மேகங்கள் தவழும் வெள்ளி மலை

image

ஊட்டிக்கு செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் அருகில் உள்ள கல்வராயன் மலை அருகே வெள்ளி மலைக்கு சென்று வரலாம். மேகங்கள் தவழும் வெள்ளிமலைக்கு அருகில் அருவிகளும்,ஏரிகளும் மற்றும் பல எண்ணற்ற சுற்றுலா தளங்களும் உள்ளன. இந்த சம்மர் லீவுக்கு வெளில போக நேரம் இல்லாதவங்க ஒரு தடவை வெள்ளி மலைக்கு போயிட்டு வாங்க.. இத இப்பவே உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி ட்ரிப்கு பிளான் பண்ணுங்க

Similar News

News November 25, 2025

கள்ளக்குறிச்சி: கஞ்சா வைத்திருந்த நபர் வசமாக சிக்கினார்!

image

ராயசமுத்திரம் ஏரியில் உள்ள பச்சையம்மன் கோயில் அருகே உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (நவ.24) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு சந்தேகப்படும்படி பைக்-உடன் நின்று கொண்டிருந்த வடக்கீரனூரை சேர்ந்த சக்திகுமாரை சோதனை செய்த போது, அவர் அரசால் தடை செய்யப்பட்ட 32 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த கஞ்சா, பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

News November 25, 2025

தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

image

ஆத்தூரை சேர்ந்த செல்வம் தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருவதாகவும், நேற்று கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸ் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி வந்து தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக கார் ஓட்டுநர் முத்துராமன் மீது நேற்று (24) போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News November 25, 2025

கள்ளக்குறிச்சி: மழையால் இடிந்து விழுந்த வீடுகள்!

image

கள்ளக்குறிச்சியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால், நேற்று (நவ.25) மட்டும் 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. தியாகதுருகம் அருகேயுள்ள வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த மணவாளன் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அதேபோல், உதயமாமட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!