News April 17, 2025
மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாளை (ஏப்ரல் 18) புனித வெள்ளி விடுமுறை நாள் ஆகும். இதனை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலை 8 முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனவும், மற்ற நேரத்தில் 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.
Similar News
News November 9, 2025
சென்னை மெரினாவில் இன்று கலைத்திருவிழா

சென்னை மெரினாவில் இன்று கலைவிழா நடைபெற உள்ளது. இதில் ஆதிமேளம், வில்லுப்பாட்டு, மல்லர் கம்பம், தென்னிந்திய நாட்டுப்புறக் கலைகள் என மெரினாவில், ஒரே மேடையில் நடைபெற உள்ளது. நாள்: 09.11.2025 (ஞாயிறு) நேரம்: மாலை 5:30 மணி
இடம்: நீலக் கொடி பகுதி, மெரினா கடற்கரை. பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து கலைத்திருவிழாவை ரசிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்ஜோய் பண்ணுங்க.
News November 8, 2025
சென்னை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

சென்னை மக்களே! உங்களின் 10th, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால், இனி கவலையில்லை. ஈஸியாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் <
News November 8, 2025
6.42 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவம் வழங்கி வருகின்றனர். நேற்று வரை 6.42 லட்சம் பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி முடிவடையும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.


