News August 25, 2024
மெட்ரோ ரயில் பணியால் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக மவுண்ட் பூந்தமல்லி ரோடு புகாரி ஹோட்டல் முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை இன்றுமுதல் 27ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.அதன்படி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கலாம். போரூரில் இருந்து கத்திப்பாரா நோக்கி வரும் வாகனங்களுக்கு மாற்றுபாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
சென்னை: ஊர்க்காவல் படையில் சேர நல்வாய்ப்பு!

சென்னை , பெருநகர ஊர்காவல் படைக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது 18-50-க்குள் இருக்கும் ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, டிச.15க்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 91760 99249 / 74186 81700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News December 1, 2025
BREAKING: சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னையில் காலை முதல் இடைவிடாது மழை பெய்து வரும் நிலையில், பூந்தமல்லியில் உள்ள ஒருசில தனியார் பள்ளிகள் மாவட்ட நிர்வாகம் தரப்பில் விடுமுறை அறிவிக்கப்படாவிட்டாலும் தானாக முன்வந்து அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், சென்னைக்கு 30 கி.மீ தொலைவில் உள்ள புயலால், கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
News December 1, 2025
சென்னை: 10th PASS.. AIIMS-ல் வேலை ரெடி.! APPLY NOW

சென்னை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <


