News January 2, 2025
மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவிற்கு 2024ஆம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்கள். 2023ஆம் ஆண்டைவிட 2024ஆம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை பயனுள்ளதாக அமைந்துள்ளது.
Similar News
News November 25, 2025
சென்னை: போக்சோ வழக்கில் ஜாமினில் வந்தவர் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருள்(19). கடந்த செப்டம்பர் மாதம் விருகம்பாக்கம் மகளிர் போலீசாரால், ‘போக்சோ’ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன், ஜாமினில் வெளிவந்த அவர், கொரட்டூரில் மகளிர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார்.இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிகின்றனர்.

சென்னையில் இன்று மின் தடை… உங்க ஏரியா இருக்கா?

சென்னை மாநகரின் எழும்பூர் பகுதியில் எழும்பூர் உயர் சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், சேத்பேட்டை, பாத்தியோன் சாலை, மண்டியேத் சாலை, மார்ஷல் சாலை, எத்திராஜ் சாலை, மோதிலால் லேன், பழைய கமெயின்சர் அலுவலகம், நீதிபதிகள் அலுவலகம் ஆகிய இடங்களில் காலை 9 – மாலை 5 வரை மின்தடை இருக்கும். ஷேர் பண்ணுங்க.