News August 14, 2024

மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை மாநகராட்சி அலுவலகம்

image

இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், என பல்வேறு இடங்களில் தேசிய மூவர்ண கொடி மூலம் அலங்கரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகம் முழுவதும் மூவர்ண விளக்குகளால் கண்கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 22, 2025

சென்னை: பொதுமக்கள் குறைதீர் முகாம்

image

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் முகாமில் காவல் ஆணையாளர் ஆ.அருண் இன்று (22.10.2025) 9 புகார் மனுக்களை பெற்றார். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு தீர்வு காணும் முயற்சியாக இந்த முகாம் நடைபெற்று வருகிறது.

News October 22, 2025

சென்னையில் மழை தொடரும்!

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், சென்னையில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 22, 2025

சென்னை: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!