News August 14, 2024
மூவண்ணக் கொடியில் மிளிரும் நாகூர் தர்கா மினாரா

நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினாரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினாராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, ஜொலித்து காணப்படுவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.
Similar News
News July 5, 2025
நாகப்பட்டினம்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் நாகை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!
News July 5, 2025
நாகையில் சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி..!

நாகை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் (அ) அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு இந்த <
News July 5, 2025
நாகை புதிய கடற்கரையில் இன்று மாலை திரைப்படம் திரையிடல்

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ஜூலை 5 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதில் எல்லோரும் வந்து கலந்து கொண்டு திரைப்படத்தை கண்டு களித்து செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதனை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு ஆகாஷ் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.